திருவள்ளூர்: பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை, கடந்த 2013ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
எட்டு மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில், காவல் ஆணையர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு அலுவலகம், மக்கள் குறைதீர் மையம், காவல் அலுவலர்கள் அலுவலகங்கள் ஆகியவை செயல்படுகின்றன. குறிப்பாக எப்போதுமே மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாகவே காணப்படும்.
ஒருமுறை கூட கண்டுகொள்ளாத அலுவலர்
இந்நிலையில் சென்னையின் ஒரு முக்கிய அடையாளமான காவல் ஆணையர் அலுவலகம், தற்போது சரியான பெயர் பலகையே இல்லாமல் இயங்கிவருகிறது.
குறிப்பாக காவல் ஆணையர், தினமும் இர்வின் பாலம் வழியாக காரில் வந்து காவல் அலுவலகத்திற்குள் செல்வது வழக்கம். அப்போது ஒருமுறைக்கூட உடைந்த பெயர் பலகையை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மேலும் முக்கிய சாலையான பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் அலுவலகம் பெயரின்றி காணப்படுவது, பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க:பத்திரிகை துறையினர் மீதான வழக்குகள் ரத்து