சென்னை:கிண்டியில் ஆளுநர் மாளிகை 1வது நுழைவு வாயில் முன்பு கடந்த அக்டோபர் 25 அன்று பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை ஆளுநர் மாளிகை நோக்கி வீசிய கருக்கா வினோத் என்ற ரவுடியை போலீஸார் மடக்கி பிடித்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் சாதுரியமாக செயல்பட்டதாக 9 காவல் அதிகாரிகளை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், நேற்று (அக்.28) காவலர்களை நேரில் அழைத்து சான்றிதழ்களை வழங்கி, பாராட்டுகளை தெரிவித்தார்.
குண்டு வீசிய கருக்கா வினோத்தை கிண்டி காவல் துறையினர் கைது செய்து, நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட்டு பிறகு புழல் சிறையில் அடைத்தனர். இந்த சர்ச்சை மிகப்பெரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்து ஆளுநர் மாளிகை பல அறிக்கைகளை வெளியிட்டது.
அதில், முக்கியமாக இந்த சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்களைப் பற்றி விசாரணை நடத்தப்படவில்லை எனவும், காவல் துறையினர் நியாயமான விசரணையைத் தொடங்க வேண்டும் எனவும் குறிபிட்டனர். மேலும், கருக்கா வினோத்தை தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட வேண்டும் எனவும், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் மனு அளிக்கப்பட்டது.