சென்னை பெருநகர காவல்துறையில் செயல்பட்டுவரும் "தோழி" என்கிற திட்டத்தின் கீழ் பணிபுரியும் காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மனநல மருத்துவர், குழந்தைகள் நல ஆர்வலர் ஆண்ட்ரூ, நடிகர் தாமு, வழக்கறிஞர் ஆதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண் காவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது காவல் ஆணையர் பேசுகையில்," "மனிதாபிமானத்துடன் சேவையாற்றுதல்" என்கிற லட்சியத்தின் அடிப்படையில் சென்னை காவல் துறை பணிபுரிந்து வருகிறது. அதன்படி, பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதில், முக்கியமாக வீட்டிலிருந்தப்படியே வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கும் திட்டம், ரோந்து வாகனத்தில் புகார் பெறும் திட்டம், எளிதாக அணுகும் வகையில் சைபர் காவல் நிலைய திட்டம் என இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது.
பாலியல் குற்றங்களில் பாதிக்கும் குழந்தைகள், பெண்களுக்கு அதிலிருந்து விடுபடவும் வழக்கு தொடர்பாக அவர்களிடம் எளிதில் அணுகுவதற்கான சூழலை ஏற்படுத்தி, மன ரீதியான ஆறுதலையும் அவர்களுக்கான சட்ட பாதுகாப்பையும் உறுதி செய்வதே 'தோழி" திட்டம். தோழி திட்டத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் இதை கடமையாக செய்யாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து சேவையாக செய்யும் காவலர்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இதுவரை, தோழி திட்டத்தில் பாதிக்கப்பட்ட 400 பேருக்கு உரிய முறையில் ஆலோசனை வழங்கி, உளவியல், சட்ட ரீதியாக வழக்கை நடத்தி வருவதுடன் அவர்களுக்கு தேவையான சமூக பாகாப்பையும் உறுதி செய்துள்ளது பாராட்டுக்குறியது" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற பல்வேறு பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் "தோழியாக"செயல்பட்ட பெண் காவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து விருதுகளை காவல் ஆணையர் வழங்கினார்.
இதையும் படிங்க:திருடுபோன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர்