தமிழ்நாட்டில் கரோனா முன்களப் பணியாளர்கள், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் பலரும் தடுப்பூசியினை செலுத்தி வருகின்றனர்.
கரோனா தடுப்பூசி செலுத்திய காவல் ஆணையர் - சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்
சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இன்று இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொண்டார்.
chennai police commissioner gets second doss of Covid vaccine
இதற்கிடையில், முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய பலரும் தற்போது இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இன்று எழும்பூர் காவலர் மருத்துவமனையில் தனது இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அவருடன், அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உடனிருந்தார்.