தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Traffic Police: டிடி கேஸில் ரூ.15 கோடி அபராதம் வசூல்.. சென்னை டிராஃபிக் போலீஸ் அதிரடி!

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நிலுவை வழக்கில் ரூ.15 கோடி வரை அபராத தொகையை போக்குவரத்து காவல்துறையினர் வசூலித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 19, 2023, 5:16 PM IST

சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை விபத்தை குறைக்கும் வகையில் மோட்டர் வாகன சட்டத்தை அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணங்களில் பரவலான ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவது. இதனால், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக அபராதத் தொகை ரூ.10,000 என போக்குவரத்து காவல்துறையால் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், குடிபோதையில் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள் பத்தாயிரம் ரூபாய் அதிகமாக இருப்பதால் அபராதத்தை கட்டாமல் தவிர்த்து வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபராதம் செலுத்துவதில்லை. இதனால் சென்னையில் மட்டும் சுமார் 10,485 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க: Cuddalore Bus Accident: தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - பலி 5 ஆக அதிகரிப்பு

இதையடுத்து விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 17.06.2023 அன்று அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: "நீ வா பார்த்துக் கொள்ளலாம்" - கைகலப்பாக மாறிய முகநூல் வாக்குவாதம்... நடந்தது என்ன?

இந்த நடவடிக்கையின் மூலம் 520 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராத தொகையாக ரூ.53,54,500 விதி மீறுபவர்களால் செலுத்தப்பட்டன. கடந்த 5 மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 14,158 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.14,64,49,600 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளனர். ஏற்கனவே, இது போன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 371 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனங்களுக்கு 40 கிமீ மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரவு 10 மணிக்கு மேல் காலை 7 மணி வரை 50 கிமீ மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி சென்றால் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவதாக அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Chennai Rains: மழைநீர் தேங்கியதால் கிண்டி கத்திப்பாராவில் போக்குவரத்துக்குத் தடை; தானியங்கி மோட்டாரை சரி செய்ய கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details