தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு: காவல் துறையின் புதிய முயற்சி! - chennai police awareness regarding traffic rules

சென்னை: புறநகர்ப் பகுதியில் போக்குவரத்து, சட்ட ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சாலை
சாலை

By

Published : Dec 17, 2020, 10:09 AM IST

சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், ஆலந்தூர் பகுதிகளில் போக்குவரத்து காவல் துறையினரும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினரும் இணைந்து சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சாலை விதிகள்

  • சிக்னலின் எல்லைக் கோட்டிற்கு உள்ளே வாகனத்தை நிறுத்த வேண்டும்,
  • கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்,
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது,
  • செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது,
  • பாதுகாப்பான முறையில் வாகனத்தைச் செலுத்த வேண்டும்,
  • வாகனத்தின் உரிமம் அனைத்தையும் முறையாக வைத்திருக்க வேண்டும்

என ஒலிபெருக்கி மூலமாகவும் துண்டுப்பிரசுரங்கள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அபராதமின்றி அறிவுரை

மேலும், தலைக்கவசம், வாகன உரிமம் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளைப் பிடித்து அபராதம் போடாமல் அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.

இந்தச் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் டேனியல், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆல்வின் ராஜ், ஆலந்தூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details