தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை பாடப்பிரிவுகளுக்கான TANCET தேர்வு- 8ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் - pg course application

சென்னை: எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.ஆர்க் ஆகிய பாடப்பிரிவில் சேர்வதற்கான டான்செட் தேர்விற்கு 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொதுநுழைவு தேர்வு செயலர் ஈஸ்வர்குமார் தெரிவித்துள்ளார்.

டான்செட் தேர்வு

By

Published : May 5, 2019, 6:55 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019க்கான டான்செட் தேர்வை சென்னை அண்ணாப் பல்கலைக் கழகம் நடத்தும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த நுழைவுத் தேர்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் மண்டல கல்லூிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.

இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாயும், எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாயும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இந்த தேர்வினை எழுதுவதற்கு மே 8ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details