தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பயம்: கூழ் குடிக்க அஞ்சும் மக்கள் - கூழ் குடிக்க அஞ்சும் மக்கள்

சென்னை: கரோனா வைரஸ் கிருமிகள் குளிர்ச்சியான உடலில் எளிதாக தோன்றும் என்பதால் கோடை வெயிலில் கூட கேழ்வரகு கூழ் குடிப்பதை மக்கள் தவிர்க்கின்றனர்.

coronavirus
chennai peoples scared to eat millet's

By

Published : Apr 18, 2020, 8:20 PM IST

பொதுவாக கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணிக்க வெங்காயம் சேர்கப்பட்ட கேழ்வரகு கூழ் மோருடன் கலந்து குடிப்பதை மக்கள் விரும்புவார்கள். ஆனால், கரோனா வைரஸ் கிருமிகள் குளிர்ச்சியான உடலில் எளிதாக தோன்றும் என்கிற அச்சத்தில் கேழ்வரகு கூழ் குடிப்பதை மக்கள் தவிர்க்கின்றனர்.

சென்னை டுமீல் குப்பத்தை சேர்ந்த கூழ் விற்பனை செய்யும் பெண் செல்லியம்மாள் ஒவ்வொரு பருவ மாற்றத்திற்கு தகுந்தார்போல் தனது நான்கு சக்கர தள்ளு வண்டியில் சிறிய அளவிலான வியாபாரம் செய்து அதன் மூலம் தனது குடுப்பத்தாரை பராமரித்து வருகிறார் இவரைப்போல் பலர் சென்னை மாநகர் பகுதிகளில் தொழில் செய்து வருகின்றனர்.

தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க அரசால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் இவர்களின் வியாபாரத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போதைய கோடை வெயிலில் வழக்கம் போல் கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்த செல்லியம்மாளின் தள்ளு வண்டியில் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை காவல்துறையினர் அறிவிப்பின் படி விற்பனை செய்கிறார்.

ஆனாலும் கேழ்வரகு கூழ் விற்பனை ஆகாததால் கம்பங் கூழை மட்டுமே விற்பனை செய்து தனது குடும்பத்தினருக்கு ஓரளவிற்கு பசியாற்றுவதாகக் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளுக்கு பொருள் உதவி - சேவா பாரதி அமைப்பினர் அசத்தல்

ABOUT THE AUTHOR

...view details