கரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு தளர்வுகளை மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இருப்பினும் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு மாறாக சென்னை தலைமை செயலகத்துக்கு எதிரே உள்ள பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவில் பொதுமக்கள் பலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.