தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அபராதம் விதிக்கும் காவல்துறை: கண்டுகொள்ளாத வாகன ஓட்டிகள் - சென்னை செய்திகள்

சென்னை: அபராத ரசீதுகளை இருசக்கர வாகனத்தின் இருக்கைககளில் வைக்க வேண்டாம் என்ற போக்குவரத்து காவல் துறையினரின் அறிவுரையை, கண்டுகொள்ளாமல் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

சென்னையில் அபராதங்களை காதில் வாங்கி கொள்ளாத வாகன ஓட்டிகள்!
சென்னையில் அபராதங்களை காதில் வாங்கி கொள்ளாத வாகன ஓட்டிகள்!

By

Published : Jun 14, 2020, 3:42 PM IST

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கில் தற்போது சிறிய தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை பொதுமக்கள் பலரும் சாதகமாக பயன்படுத்தி தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் வெளியே சுற்றிவருகின்றனர். குறிப்பாக, சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள இடங்களான ரிச்சி தெரு, பர்மா பஜார், மீர்சாகிபேட்டை போன்ற இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதில், ரிச்சி தெரு குறுகிய பகுதி என்பதால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், கடையின் உரிமையாளர்களின் வாகனங்களை பிளாக் சாலையில் நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி வழங்கிய இடங்களை விட அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் பொதுமக்கள் வாகனங்களை விட்டு கடைக்கு செல்கின்றனர்.

சென்னையில் அபராதங்களை காதில் வாங்கி கொள்ளாத வாகன ஓட்டிகள்!

இவ்வாறு நிறுத்தி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து, கட்டண தொகையின் சீட்டை வாகனத்தின் இருக்கையிலேயே வைத்துவிட்டு சென்று விடுகின்றனர். மேலும் இந்த அபராத தொகையை பார்க்காமலோ அல்லது செலுத்தாமல் பலர் இருப்பதால் அவர்களது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வரும்படி போக்குவரத்து காவல் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக நேற்று முன்தினம் (ஜூன் 12) ஒரே நாளில் மட்டும் விதிகளை மீறி வாகனம் நிறுத்தியதாக 20 பேருக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க...கோமதி மாரிமுத்துவுக்கு நான்கு ஆண்டுகள் தடை!

ABOUT THE AUTHOR

...view details