தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கனமழை - சாலைகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி - சென்னை மாநகராட்சி

சென்னையில் சாலைகளில் மழை நீரானது தேங்கிய வண்ணமாக இருப்பதால் மாநகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் சிரமம்!
சென்னையில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் சிரமம்!

By

Published : Sep 28, 2022, 8:58 PM IST

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (செப்.28) கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்கள் மற்றும் சாலைகளில் மழை நீரானது தேங்கிய வண்ணமாக இருந்தது. இதனால் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மாநகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க தடுப்புகள் அமைப்பது, எச்சரிக்கை பலகைகள் அமைப்பது என உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பணிகள் முடிந்த இடத்தில் தண்ணீர் தேங்காமல் செல்கின்றனவா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை தண்ணீர் தேங்கிய 500க்கு மேற்பட்ட இடங்களில், இன்று தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

மழை நீர் தேங்குதல் மற்றும் புகார் இருப்பின் 1913, 044-25619206, 044-25619207 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:அக்டோபர் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details