சென்னை அடுத்த பழைய பல்லாவரம் கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (69). அதே பகுதியில் 10 ஆண்டுகளாக சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்திவருகிறார். தனது நண்பர் முருகன் என்பவருக்கு இடைத்தரகராக செயல்பட்டு, கஸ்தூரி பாய் தெருவில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த நிலம் ஏற்கெனவே நாங்கு நபர்கள் பெயரில் பதிவுசெய்யபட்டுள்ளதாக முருகனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து முருகன் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த சூழலில், தொடர்ந்து சிலர் செல்வராஜை மிரட்டி வந்துள்ளனர். இதனால் சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை மிரட்டியவர்கள் பற்றி நான்கு பக்கங்களில் எழுதி வைத்து விட்டு அவரது கடையில் நேற்று இரவு தற்கொலையால் உயிரிழந்தார்.