தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி வன்முறையில் ஈடுபட மாட்டோம்;  உறுதிமொழி எடுத்த ரூட்டு தலைகள்..!

திருவள்ளூர்: இனி வன்முறையில் ஈடுபட மாட்டோம் என அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் பிரமாண பத்திரம் எழுதிக் கொடுத்து ரூட்டு தலைகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

By

Published : Jul 26, 2019, 2:35 PM IST

Updated : Jul 26, 2019, 3:38 PM IST

ரூட்டு தலைகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடு ரோட்டில் மாணவர்கள் கத்திகளுடன் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னையில் உள்ள ரூட்டு தலைகளை அழைத்து அவர்களிடம் உறுதிமொழி பிரமாண பத்திரம் எழுதி வாங்கப்பட்டது. இந்நிலையில், ஆவடி, பூவிருந்தவல்லி, மாங்காடு, அம்பத்தூர், திருவேற்காடு, பட்டாபிராம், போரூர் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 30பேர் வரவழைக்கப்பட்டு இன்று அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் அவர்களிடம் பிரமாண பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.

உறுதிமொழி எடுத்த ரூட்டு தலைகள்

அப்போது, இனி வன்முறையில் ஈடுபட மாட்டோம் என மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் அடுத்த ஓராண்டுக்கு எந்தத் தவறு செய்தாலும் கைது செய்ய அம்பத்தூர் துணை ஆணையருக்கு அதிகாரம் உண்டு என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. பின்னர் அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Last Updated : Jul 26, 2019, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details