தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இரண்டாம் சுற்றில் இந்திய வீராங்கனை வெளியேற்றம் - eliminated in second round match

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தோல்வியை தழுவினார்.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வெளியேற்றம்
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வெளியேற்றம்

By

Published : Sep 15, 2022, 6:43 AM IST

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் அங்கிதா ரெய்னா, மற்றும் கர்மன் தண்டி ஆகியோர் களமிறங்கினர்.

இதில் அங்கிதா ரெய்னா, தான் ஆடிய முதல் சுற்று ஆட்டத்திலேயே ஜெர்மனியைச் சேர்ந்த தட்ஜனா மரியாவிடம் தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்த மற்றொரு இந்திய வீராங்கனை கர்மன் தண்டி, நேற்று (செப் 14) நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் கனடா வீராங்கனை யூஜெனி பவுச்சார்ட் உடன் மோதினார். இதில் முதல் செட்டை 2-6 என்ற சற்று திணறிய ஆட்டத்தில் கர்மன் விளையாடினார்.

இதனால் சூடுபிடித்த இரண்டாவது செட்டில் விறுவிறுப்பாக கர்மன் விளையாடி வந்தார். இருப்பினும் இறுதியாக டை பிரேக்கரில் 6-7 என்ற புள்ளி கணக்கில் கர்மன் தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் தொடரில் இருந்து அவர் வெளியேறினார்.

இதையும் படிங்க:சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனை வெளியேற்றம்

ABOUT THE AUTHOR

...view details