சென்னை : சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 333வது இடத்திலும், இந்திய தரவரிசையில் முதலிடத்திலும் உள்ள இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, தரவரிசையில் 85வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீராங்கனை தட்ஜனா மரியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
நடப்பாண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி போட்டி வரை முன்னேறியிருந்த ஜெர்மனியின் மரியா, ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி தொடர்ந்து புள்ளிகளை கைப்பற்றினார். முதல் செட் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் தனக்கே உரித்தான பாணியில் புள்ளிகளை குவித்த மரியா 6-0 என எளிதாக கைப்பற்றினார்.