தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் மனைவி வீடு திரும்பவில்லை - முதியவர் தற்கொலை - chennai old man suicide at home body recovery by police

சென்னை: பெங்களூருவில் மகள் வீட்டிற்குச் சென்ற மனைவி, ஊரடங்கால் வராததால், மனமுடைந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர் தற்கொலை
முதியவர் தற்கொலை

By

Published : Jul 17, 2020, 5:07 AM IST

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர், சந்திரமோகன் (72). இவரது மனைவி கரோனா ஊரடங்கிற்கு முன் பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றார்.

ஊரடங்கால் சென்னைக்குத் திரும்ப முடியாமல் இருந்து உள்ளார். இதற்காக பல முறை இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட சந்திரமோகன் மனைவி வீட்டிற்கு வராததால் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

அதனடிப்படையில் அங்கு சென்ற ஆதம்பாக்கம் காவல் துறையினர் கதவை உடைத்துப் பார்த்தபோது சந்திரமோகன் படுக்கை அறையில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்து நான்கு நாள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பின்னர் காவல் துறையினர் சந்திரமோகன் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முதியவர் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வரதட்சணைக் கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details