சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள 23 எம்.எல்.டி (MLD) கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 1974 ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையம் தற்போது வழக்கத்திற்கு வந்துள்ள புதிய முறைகளின்படி கைவிட வேண்டிய நிலையில் உள்ளது.
அதேநேரம் தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் வகையில், சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள 23 எம்எல்டி (MLD) திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை, நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட உள்ளது. சுத்திகரிக்கப்படாத அல்லது போதுமான அளவில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரின் வெளியேற்றம் காரணமாக நகரங்களில் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மனித ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் மோசமாக பாதிக்கிறது.
இதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. இதனால் நீர் ஆதாரங்களை முறையற்ற முறையில் நிர்வகிப்பதற்கும் பங்களிக்கிறது. இது பெரும்பாலும் அப்பகுதியில் அதிகமான நீர் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
இந்நிலையில் ஜெர்மன் அரசின் முழுமையான நிதியுதவியுடன் நெசப்பாக்கத்தில் உள்ள 23 எம்எல்டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாக அமைப்பது மற்றும் மறுபயன்பாடு “ஷோகேஸ் இன்” திட்டம், உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப, ஜெர்மன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தியாவில்அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கான கருத்தியல் வடிவமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.