எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் 2019- 20 ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு ( நீட்) இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாணவ மாணவிகள் வசதிக்கேற்ப நீட் தேர்வு பிற்பகலில் நடைபெற்றது. 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்நிலையில், ஆவடியில் செயின்ட் பீட்டர் கல்லூரியிலும் விவேகானந்தா வித்யாலயா பள்ளி, அம்பத்தூர் அடுத்த கொரட்டூரில் உள்ள பக்தவச்சலம் பள்ளியிலும் தேர்வு நடைபெற்றது. இந்த மூன்று மையங்களில் நடைபெற்ற தேர்வில் 2,820 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவு - நீட் தேர்வு
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நிறைவு பெற்றது. தேர்வெழுதிய மாணவர்கள் உற்சாகமாக தேர்வு அறையிலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில், 12 மணியளவில் மாணவர்கள் தேர்வு எழுத வந்தபோது வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நிழலுக்காக அமைக்கப்படும் பந்தல் அமைக்கப்படாததால் மாணவர்கள் வெயிலால் அவதிப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், 'நாங்கள் பல கிலோ மீட்டர் பயணம் செய்து தேர்வு எழுத இங்கு வந்துள்ளோம். எங்களுக்கு மையத்தின் வெளியிலே எவ்வித வசதியும் செய்து தரப்படவில்லை. குறைந்தபட்சம் ஷாமினா பந்தல் கூட போடப்படவில்லை. இதனால் நாங்கள் வெட்ட வெளியில் வெயிலிலே இரண்டு மணி நேரத்திற்கு மேல் நின்று அவதிப்பட்டோம் என சோர்வான முகத்துடன் தெரிவித்தனர்.