சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஓமன் நாட்டு தலைநகா் மஸ்கட்டிற்கு நேற்று (செப்.25) மாலை விமானம் ஒன்று புறப்பட இருந்தது. ஆனால், மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதால், சரிசெய்த பின் இரவு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதையெடுத்து விமானத்தில் பயணம் செய்ய சோதனைகளை முடித்துக் கொண்ட 156 பயணிகள் ஓய்வுக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
ஆனால் இரவு 9 மணிக்கு வரை விமானம் புறப்பட்டு செல்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன கவுண்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். 10 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கிறோம், உடனே விமானம் புறப்பட்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டனர்.