தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் தகராறு: நண்பனின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற 2 பேர் கைது! - chennai crime news

சென்னை: பாண்டி பஜார் அருகே குடிபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் நண்பனின் தலையில் கல்லைப் போட்டு கொலைசெய்த இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

chennai-murder-issue
chennai-murder-issue

By

Published : Dec 30, 2020, 1:12 PM IST

சென்னை தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (38). இவருக்குத் திருமணமாகி வளர்மதி (35) என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவர் பெயிண்ட்டிங் ஒப்பந்தம், பைனான்ஸ் தொழில் செய்துவந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு (டிச. 29) செந்தில் தனது நண்பர்களான தேனாம்பேட்டையைச் சேர்ந்த அசோகன் (22), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சூரி சுரேஷ் (32) ஆகியோருடன் பாண்டி பஜார் கிருஷ்ணசாமி தெருவில் மது அருந்த சென்றுள்ளனர்.

அப்போது, மதுபோதையில் இருந்த செந்தில் தனது சக நண்பர்கள் அசோகன், சூரி சுரேஷ் ஆகியோரைத் தகாத வார்த்தையால் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் கைகலப்பு ஏற்பட்டு அசோக், சுரேஷ் இருவரும் சேர்ந்து செந்திலைத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, செந்தில் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது கால் தடுக்கி கீழே விழுந்த நிலையில் இருவரும் சேர்ந்து அருகில் இருந்த கல்லை எடுத்து செந்தில் தலையில் போட்டு கொலைசெய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் செந்தில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து பாண்டி பஜார் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இந்தத் தகவலின்பேரில் சம்பவயிடத்திற்குச் சென்ற காவல் துறையினர் செந்தில் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவயிடத்தில் இருந்த இரண்டு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்த வாகனம் அசோகன், சுரேஷுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரைக் கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது - 105 கிலோ கஞ்சா பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details