தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை அவதூறாக பேசிய நண்பன் - குத்திக் கொன்ற கணவர்! - chennai murder issue

சென்னை : தனது மனைவியை அவதூறாக பேசிய நண்பனைக் குத்திக் கொன்ற நபரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

chennai murder issue
chennai murder issue

By

Published : Dec 9, 2019, 10:31 AM IST

சென்னை ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாசர் (வயது 36 ). அவரது நண்பர் அலிஷார் (42) என்பவருடன் நேற்று மாலை மது அருந்தியுள்ளார்.

அப்போது, அலிஷார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நண்பரான நாசரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாசர் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அலிஷாரை பிடித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அலிஷாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அலிஷார் வெளிநாட்டில் இருந்தபோது, அவரின் மனைவி குறித்து நாசர் தவறாகப் பேசியதாகவும், இதனால் தான் மனஉளைச்சலில் இருந்ததாக கடந்த மாதம் தான் சென்னை வந்தபோது மனைவி தன்னிடம்கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதனால் தான் ஆத்திரத்தில் இருந்ததாகவும், ஆகவே நாசரை மது அருந்த அழைத்துச் சென்று கொலை செய்ததையும் அலிஷார் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில், தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:மாலை போட்டவர் போல் நடித்து திருடியவர் கைது: விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details