தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது பாட்டிலை காணாததால் ஆத்திரம்; அக்காவைக் குத்திக் கொன்ற தம்பி!

சென்னை: வீட்டில் வைத்திருந்த மதுபாட்டிலை காணவில்லை என்று அக்காவை கொடூரமாகக் கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுவிற்காக அக்காவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த தம்பி கைது.
மதுவிற்காக அக்காவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த தம்பி கைது.

By

Published : Jan 25, 2020, 12:24 PM IST

சென்னை வளசரவாக்கம் வேலன் நகரைச் சேர்ந்தவர் தாரகேஸ்வரி (54). இவரின் கணவர் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் இலங்கையிலிருந்து தன் தாய், மூன்று குழந்தைகளுடன் வந்து சென்னையில் குடியேறினார்.

இந்தநிலையில் இலங்கையில் வசித்துவரும் தாரகேஸ்வரியின் சகோதரர் குகதாசன் (54), வருடந்தோறும் சபரிமலைக்குச் சென்றுவிட்டு தனது சகோதரி வீட்டில் வந்து ஒரு மாதம் தங்கி செல்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் வந்து தங்கியிருந்த நிலையில், வீட்டில் தான் வைத்திருந்த மது பாட்டிலை காணவில்லை என்று குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

பின்னர் உச்சபட்ச கோபமடைந்த குகதாசன், வீட்டில் இருந்த கத்தியினை எடுத்து தனது அக்கா தாரகேஸ்வரியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற தாய் வேதநாயகி மற்றும் தாரகேஸ்வரியின் மகன் ஆதிசேஷன் என்பவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இவர்கள் அனைவரும் கூச்சலிடும் சத்தத்தினைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் குகதாசனிடம் இருந்து மீட்டனர்.

மதுவிற்காக அக்காவை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி
மேலும், இந்த சம்பவத்தில் தாரகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், குகதாசனை கைது செய்துவிட்டு, தாரகேஸ்வரியின் உடலினை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details