தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்ணை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது - சென்னை மாநகராட்சி

சென்னை வாழ் மக்களின் புகார்களைத்தெரிவிக்க வாட்ஸ்அப் எண்ணை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Chennai Municipal Corporation has released a WhatsApp number to lodge complaints
Chennai Municipal Corporation has released a WhatsApp number to lodge complaints

By

Published : Oct 26, 2022, 10:52 PM IST

சென்னைமாநகராட்சியால் வடிவமைக்கப்பட்டுள்ள "நம்ம சென்னை" செயலி 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்தச்செயலியின் மூலம் பிறப்பு மற்றும் இறப்புச்சான்றிதழ் தரவிறக்கம், சொத்து வரி செலுத்துதல் மற்றும் வரி வசூல் நிலவரம், தொழில் வரி வசூல் நிலவரம், நிறும வரி வசூல் நிலவரம், வர்த்தக உரிமம் – விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தல் நிலவரம், பொதுமக்கள் புகார்களின் குறைதீர்த்தல், புகார்களை மீண்டும் திறக்கும் வசதி, பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் இடையே பல்வேறு ஆன்லைன் சேவைகள், தன்னார்வலர்கள் பதிவு செய்யும் வசதி போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 1.2 லட்சத்திற்கும் மேற்பட்ட கைபேசி உபயோகிப்பாளர்களால், நம்ம சென்னை செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்தச்செயலியில் 94 வகையான புகார்கள் 12 குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 1,21,838 புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் 94999 33644 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் சேவைகளும் வழங்கப்படுகின்றன.
எனவே, பொதுமக்கள் மாநகராட்சியால் வழங்கப்படும் நம்ம சென்னை செயலி மற்றும் 94999 33644 என்ற வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு: சயானின் ஜாமீன் நிபந்தனை தளர்வு; மாதத்தில் ஒருமுறை ஆஜரானால் போதும்

ABOUT THE AUTHOR

...view details