சென்னை முகப்பேர் வேணுகோபால் தெருவில் வசித்து வந்தவர் தசரதன்(58). இவர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவராக மாறியவர் ஆவார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு மோசமான நிலையில் இருநத் தசரதன் நேற்றிரவு உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். இந்நிலையில், அவருடைய உறவினர்கள் அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ சுடுகாட்டில் அவரது உடலை புதைக்க அனுமதி கேட்டிருந்தனர்.
இறந்தவரின் உடலை புதைக்க இடம் தராத பாதிரியார்! - one man died
சென்னை: முகப்பேரில் இறந்தவர் உடலை புதைக்க தேவாலய பாதிரியார் இடம் தராததால் உறவினர்கள் பிணத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், இந்த சுடுகாட்டை பராமரித்து வரும் பாதிரியார் ஆசிர்வாதம், "எனது தேவாலயத்துக்கு வருபவர்களுக்கு மட்டுமே இந்த சுடுகாட்டில் புதைக்க அனுமதி தரப்படும். வேறு தேவாலயத்தை சேர்ந்தவர்களுக்கு இங்கு இடமில்லை", என கூறி புதைக்க இடம் தராமல் சுடுகாட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தசரதன் உறவினர்கள் அருகில் இருந்த சாலையில் பிணத்தை வைத்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் காவல் துறையினர் தசரதன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிணத்தை புதைக்க ஏற்பாடு செய்தனர்.
இறந்தவருக்கு மனிதாபிமான அடிப்படையில் புதைக்க இடம் தராத பாதிரியாரை அப்பகுதி மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.