சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுடன் இணைந்து தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், சுமார் 2 ஆயிரம் பேருக்கு தேவையான தலையனை, போர்வை, ரொட்டி, பால், அரிசி உள்ளிட்ட உதவிகளை வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "மாண்டஸ் புயலால் சேப்பாக்கம் தொகுதியில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாகவும், அதையும் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் உடனடியாக சரி செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி..? முதலமைச்சர் முடிவு..! - CM will decide to Minister post to udhayanidhi
தனக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின்
புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டுவதாகவும், தனக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார்" என்றும் கூறினார்.
இதையும் படிங்க:டெல்லி மதுபான வழக்கு: தெலங்கானா முதலமைச்சரின் மகளிடம் சிபிஐ விசாரணை