தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரானில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை மீட்க வேண்டும் - எம்.எல்.ஏ. பிரின்ஸ்.! - MLA Prince Press Meet

சென்னை: ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை மீட்க வேண்டும் எம்.எல்.ஏ பிரின்ஸ் செய்தியாளர் சந்திப்பு Tamil Nadu fishermen in Iran must be rescued MLA Prince Press Meet Chennai MLA Prince Press Meet
MLA Prince Press Meet

By

Published : Mar 12, 2020, 4:16 PM IST

சென்னையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "ஈரானில் உள்ள தீவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் வீடு திரும்ப முடியாமல் சிக்கி உள்ளனர்.

அவர்களில் 721 பேர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள். மீனவர்களுக்கு சரியாக உணவு, குடிநீர் கொடுக்காமல் படகிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.எல்.ஏ பிரின்ஸ் செய்தியாளர் சந்திப்பு

இது தொடர்பாக கன்னியாகுமரியில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிக்க வேண்டும். சட்டப்பேரவையில் ஏதேதோ பேசுகிறார்கள், ஆனால் இந்த பிரச்னை குறித்து பேச முடியவில்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் - மீட்காத அரசுகளை கண்டித்து போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details