சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பி.எஸ்.சி. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இரண்டு மாணவர்களின் புகைப்படத்தில் மாற்றம் உள்ளது என சந்தேகிப்பதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அது குறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுதான் தெளிவாக விளக்க வேண்டும்.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்திற்கும் நேரடியாக எந்தவிதத் தொடர்பும் கிடையாது. மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் விவரங்கள் மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படும். அதனை நாங்கள் சரிபார்த்த பின்னரே அந்த மாணவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக அறிவிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ந்த விவரங்களைச் சரிபார்த்து அளிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதனடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களில் எந்தவித பிரச்னையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.