சென்னை மாநகராட்சி பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் கழிவுநீர் இணைப்பு பெற்றிட 'அழைத்தால் இணைப்பு', 'இல்லந்தோறும் இணைப்பு' என்ற இரண்டு புதிய திட்டங்கள் சென்னை குடிநீர் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜி+1, ஜி+3, ஸ்டில்ட் + 3 ஆகிய தளம் வரையுள்ள கட்டடங்களுக்கு கழிவுநீர் இணைப்பு பெற, 044-45674567 என்ற தொலைபேசி மூலமாகவோ, சென்னை குடிநீர் வாரிய இணையதளம் மூலமாகவோ நேரிலோ பதிவு செய்தவுடன் எவ்வித ஆவணங்களுமின்றி எளிய முறையில் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும்.