சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், 'தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் வளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சியில் ஏற்பட்டுள்ள வெப்பச் சலனத்தின் காரணத்தால், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாகச் சேலம் மாவட்டம் சங்ககிரியில் 12 செ.மீ. மழையும், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தலா 8 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.