தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெயிலும் இருக்கும் மழையும் வரும்.. வானிலை ஆய்வு மையம் விடுத்த அப்டேட்!

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருகிறது மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
வருகிறது மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

By

Published : Jun 4, 2023, 2:14 PM IST

சென்னை:இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜூன்4) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

முக்கியமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை (ஜூன்5) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் நாளை மறுநாள் (ஜுன் 6) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வருகிற 7 மற்றும் 8ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், இன்றும், நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.

அப்போது ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். அதேநேரம், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மேலும், இன்று முதல் நாளை மறுநாள் வரை மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

அது மட்டுமல்லாமல், வருகிற 7ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

முக்கியமாக, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். இதனையடுத்து வருகிற 8ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

தென் கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோடை வெப்பம் - உடல் சூட்டை குறைக்க மருத்துவர்கள் டிப்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details