குடிநீர் முன்பதிவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னை: குடிநீர் வழங்கல் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் குடிநீர் முன்பதிவு செய்பவர்களுக்கான சமவாய்ப்பினை வழங்க சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
சென்னை குடிநீர் வழங்கல் வாரியம்
சென்னையில் நிலவிவரும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை ஈடு செய்வதற்காக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் குடிநீர் முன்பதிவு செய்பவர்களுக்கான பின்வரும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கான சமவாய்ப்பினை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- பதிவு செய்த இரண்டு நாட்களில் ஏதேனும் ஒருநாளில் குடிநீரை பெற்றுக்கொள்ளலாம்.
- குடிநீர் விநியோகிக்கப்பட்ட காலத்திலிருந்து ஏழு முதல் பத்து நாட்களுக்குப் பிறகே அடுத்த பதிவினை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
- இந்த சேவையினை இணையம், தொலைபேசி மூலமாக முன்பதிவு செய்யலாம்.
- தொலைபேசி சேவையை பயன்படுத்துவோர் மூன்றாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரியை மட்டுமே பதிவு செய்யமுடியும்.
- அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கென கிடைக்கும் தண்ணீர் அளவினையும் இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
- முன்பதிவினை ரத்து செய்யவோ, தேதிகளை மாற்றம் செய்யவோ முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Last Updated : Jul 27, 2019, 12:33 PM IST