தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெட்ரோ ரயில் பணிகள்- போக்குவரத்து மாற்றம் - லட்சுமி அம்மன் கோவில் தெரு

சென்னை மாதவரம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

Metro traffic
Metro traffic

By

Published : Oct 8, 2021, 8:30 PM IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரம்பூர் (செம்பியம்) பகுதியில் உள்ள மாதவரம் நெடுஞ்சாலையில் வரும் 10 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் பணி தொடர்பாக மண் பரிசோதனை பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.

இதனையடுத்து மாதவரம் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மாற்றம்
அதன்படி மூலக்கடை மார்க்கத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை வழியாக பெரம்பூர் ரயில் நிலையம், அதனை சார்ந்த பகுதிகளுக்கு செல்பவர்கள், லட்சுமி அம்மன் கோவில் தெரு, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, B.B.ரோடு (Birth & Burial Road), பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒத்துழைப்புதேவை

பெரம்பூர் மார்க்கத்திலிருந்து, மூலக்கடை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் மாதவரம் நெடுஞ்சாலையை, தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி - சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details