தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Metro Rail: 2022-ல் மெட்ரோ பயனர்கள் எவ்வளவு தெரியுமா.? - chennai metro ticket bookings

Chennai Metro Rail: 2022-ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்கள் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

chennai metro train மெட்ரோ பயனர்கள்
மெட்ரோ பயனர்கள்

By

Published : Jan 2, 2023, 4:42 PM IST

சென்னை(Chennai Metro Rail):கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 29 முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியது. இதுவரை சென்னையில் உள்ள மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் சென்னை மெட்ரோ ரயில் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை செய்து வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஏழு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2022-ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்கள் என்றும்; 2021-ம் ஆண்டைவிட 2022-ம் ஆண்டில் 3.56 கோடி பயணிகள் அதிகமாக பயணித்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் துவங்கியதிலிருந்து நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 2015 முதல் 2018 வரை 2 கோடிய 80 லட்சத்து 52 ஆயிரத்து 357 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டில் 3 கோடிய 28 லட்சத்து 13 ஆயிரத்து 628 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள்.

கரோனா தொற்று காரணமாக கடைபிடிக்கப்பட்ட பொது முடக்கத்தினால் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் 1 கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 982 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மீண்டும் கரோனா தொற்று காலம் என்பதால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் 2 கோடிய 53 லட்சத்து 3 ஆயிரத்து 383 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டில் 6 கோடிய 9 லட்சத்து 87 ஆயிரத்து 765 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள்.

இதுவரை சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஏழு ஆண்டுகளில் அதாவது, 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 15 கோடியே 88 லட்சத்து 8 ஆயிரத்து 208 பயணிகள் பயணித்துள்ளார்கள். மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய அரேபிய விமானம்!

ABOUT THE AUTHOR

...view details