தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை முதல் நீட்டிப்பு! - சென்னை மெட்ரோ ரயில் சேவை

சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை முதல் நீட்டிப்பு!
சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை முதல் நீட்டிப்பு!

By

Published : Nov 7, 2020, 3:29 PM IST

தற்பொழுது சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கி வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள், அத்தியாவசிய பணியாளர்கள், வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்டோரின் தேவையை கருத்தில்கொண்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை (நவ. 7) முதல் நீட்டிக்கப்படுகிறது. இதன்மூலம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை இயக்கப்படும்.

உச்ச நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகள், அரசு விடுமுறை நாள்களில் சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை உச்ச நேரம் இல்லாமல் செயல்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...”பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” - அமைச்சர் செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details