சென்னை: மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப வரும் திங்கள்கிழமை (12.07.2021) முதல் வார நாள்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை) மெட்ரோ ரயில் சேவைகள் காலை 05.30 மணி முதல் இரவு 10.00 மணிவரை இயக்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் (Peak Hours) காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் (Non-peak hours) 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், அரசுப் பொது விடுமுறை நாட்களில் காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ, முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதம் வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திங்கள்கிழமை முதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு - chennai district news
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வரும் திங்கள்கிழமை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணிவரை இயக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
chennai-metro-train-time-increase