சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் (Metro Rail) சேவையில், டிக்கெட் எடுப்பதற்கு பயண அட்டை முறை, க்யூ ஆர் குறியீடு(QR CODE) முறை உள்ளிட்ட பல்வேறு வகையான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வாட்ஸ்-அப் மூலமாகவும் டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாடஸ்அப் டிக்கெட் வசதி என்பது மெட்ரோ ரயில் சேவை அனைத்து தரப்பு மக்களும் எளிதாகவும், விரைவாகம் அணுகக் கூடியதாக மாறும் என்றும் டிக்கெட் எடுக்க செலவிடும் நேர விரையமும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை சென்னையில் நாள் ஒன்றிற்கு சுமார் 2 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதியால் பயணிகளின் நேர விரையமும் குறையும் என்றும், அதிகளவிலான மக்கள் மெட்ரோ ரயிகளில் பயணிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.