தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 ரூபாய் இருந்தால் போதும்.. சென்னை மெட்ரோ கொடுத்த அதிரடி சலுகை! - metro rail tickets for Rs 5

Chennai Metro rail: சென்னை மெட்ரோவில் வருகிற 17ஆம் தேதியும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ரூபாயில் மெட்ரோவில் பயணம்
5 ரூபாயில் மெட்ரோவில் பயணம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 11:51 AM IST

சென்னை:மெட்ரோ ரயில் நிறுவன நாளில் மழை காரணமாக மக்கள் வருகை குறைவானதால், வருகிற 17ஆம் தேதி மெட்ரோ ரயிலில் ரூ.5 என்ற கட்டணத்தில் மீண்டும் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு, டிசம்பர் 3ஆம் தேதி அன்று க்யூஆர் பயணச் சீட்டுகளை (Static QR, Mobile QR, Paytm, Whatsapp and PhonePe) பயன்படுத்தி பயணித்த பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேக கட்டணத்தை வழங்கியது.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் (MICHAUNG) மற்றும் கனமழை காரணமாக டிசம்பர் 3ஆம் தேதிஅன்று மெட்ரோ பயணிகள் அதிகளவில் பயணிக்க இயலாத சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, மக்கள் இந்த சலுகையை வேறு ஒரு நாளுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்ற மெட்ரோ ரயில் நிர்வாகம், வருகிற 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மெட்ரோவில் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ பயணிகள் இச்சலுகையைப் பயன்படுத்தி வெறும் ரூ.5 என்ற பிரத்யேக கட்டணத்தில் பயணிக்கலாம்.

ஆனால், ஒரு முக்கியமான நிபந்தனையையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்த பிரத்யேக கட்டணம் டிசம்பர் 17ஆம் தேதி மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது கியூ ஆர் பயணச்சீட்டு, மொபைல் கியூ ஆர், பேடிஎம், வாட்ஸ் அப் மற்றும் போன்பே போன்றவற்றின் மூலம் டிக்கெட் எடுப்பதற்கு (Static QR, Mobile QR, Paytm, Whatsapp and PhonePe) மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித கியூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகை பொருந்தாது. இது பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேக கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் 5 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்று கூறியிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிச்சயம் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:திருவண்ணாமலை மலை மீது இருக்கும் அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜை!

ABOUT THE AUTHOR

...view details