தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 13, 2020, 4:12 PM IST

ETV Bharat / state

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்: நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்!

சென்னை: வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பாதையை விரிவுபடுத்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருவதாக மெட்ரோ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

etro
metro

சென்னை மாநகரப் பகுதியிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. குறிப்பாக, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாள்களில், தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு வரை புறநகர் பகுதிகளில் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

இதனைக் குறைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி, புறநகர்ப் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பது தொடர்பான சாத்திய கூறுகளை சென்னை மெட்ரோ ஆய்வு மேற்கொண்டது.

இதில், ரயிலின் வழித்தடம், அவற்றின் தூரம், ரயில் நிலையங்கள் அமைப்பது, சாலையில் வாகன நெரிசல் உள்ளிட்டவை குறித்து மெட்ரோ ரயில் அலுவலர்கள் விரிவான ஆய்வு நடத்தினர்.

இதன் முடிவில், மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க சாத்தியம் இருப்பதால், நிலம் கணக்கிடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மெட்ரோ ஊழியர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details