சென்னை மெட்ரோ ரயில் சேவை அதிகமானோர் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையிலும், பொது மக்களுக்கு கூடுதல் சேவை வழங்கும் வகையிலும் வரும் 27ஆம் தேதி முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை தினங்களில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பாதிக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விடுமுறை நாள்களில் பாதி விலையில் டிக்கெட் - சென்னை மெட்ரோ அறிவிப்பு! - சென்னை மெட்ரோ நிர்வாகம்
சென்னை: அரசு விடுமுறை நாள்கள், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை மெட்ரோ ரயிலில் பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Chennai Metro Fare 50 persentage on Holidays
அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 27, 28ஆம் தேதியும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதியும் பாதிக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தச் சலுகை சாதாரண பயணச் சீட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் மாதாந்திர பாஸுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து அறிவிப்பு வரும்வரை இந்தச் சலுகை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.