கரோனா பரவலைத் தடுக்க பயணிகளும், ஊழியர்களும் நேரடித் தொடர்பில் வராத வகையில் க்யூஆர் கோடு முறை மூலமாக டிக்கெட் பெறும் நடைமுறையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னை மெட்ரோவில் க்யூஆர் கோடு டிக்கெட்டுகளுக்கு 20% சலுகை! - மெட்ரோ டிக்கெட் யூஆர் கோடு
சென்னை: பயணிகள் க்யூஆர் கோடு மூலம் டிக்கெட் பெற்றால் 20 விழுக்காடு சலுகை வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் பெறுவதற்காகப் பயணிகள் வரிசையில் நிற்பதைத் தடுக்கும் வகையில், க்யூஆர் கோடு முறையில் டிக்கெட் பெறுபவர்களுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு முறை செல்ல டிக்கெட், சென்று வருவதற்காக டிக்கெட், குழு டிக்கெட், ட்ரிப் பாஸ் உள்ளிட்டவற்றுக்கு க்யூஆர் கோடு மூலமாக டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 விழுக்காடு கட்டணம் வழங்கப்பட உள்ளது. மேலும் சென்னை மெட்ரோ ரயிலின் மொபைல் செயலி பயன்படுத்தப்படுவதால், கரோனா பரவல் தடுக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.