தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒருநாளுக்கு முன்னரே தொடங்கிய வடகிழக்கு பருவமழை - வானிலை மையம் எச்சரிக்கை! - சென்னை வானிலை ஆய்வு மையம்

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை ஒரு நாளுக்கு முன்னதாகவே தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Med Report
Med Report

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 10:16 PM IST

சென்னை: வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு நாளுக்கு முன்னரே தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், "வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் துவங்கி உள்ளது, அதேப்போல், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

நாளை (அக். 22) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் அது வடகிழக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்கதேசம் கடற்கரைக்கு செல்லக்கூடும் என்று தெரிவித்தார். மேலும், அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ‘தேஜ்’ புயலாக வலுப்பெற்று தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இது அடுத்த மூன்று நான்கு தினங்களில் மிக தீவிர புயலாக வலுப்பெற்று ஏமன் மற்றும் ஓமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என்று தெரிவித்தார். அடுத்த முன்று தினங்களுக்கு லேசனா மழை முதல் மிதமான மழைக்கு வாய்புள்ளது என்றார்.

நாளை மழைக்கு வாய்பு: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் : அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 அல்லது 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 அல்லது 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழைப்பதிவு: கொட்டாரம் (கன்னியாகுமரி) 7 செ.மீ மழைப்பதிவு, கன்னியாகுமரி, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), ராதாபுரம் (திருநெல்வேலி) தலா 5 செ.மீ மழைப்பதிவு, அணைகெடங்கு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்) தலா 4 5 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது" என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க :அண்ணாமலை வீடு முன் பாஜக கொடிக் கம்பம் அகற்றம் விவகாரம்! பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி கைது!

ABOUT THE AUTHOR

...view details