தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயல் வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம் - tn weather

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai
வானிலை ஆய்வு மையம்

By

Published : May 14, 2021, 2:15 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று(மே.13) மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது. இன்று மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுபெறக்கூடும் .

இன்று (மே.14) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய அதிகன மழையும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

மே 15: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மே 16, 17 ஆகிய தேதிகளில், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேர மழை அளவு (சென்டிமீட்டரில்)

குழித்துறை (கன்னியாகுமரி) 11 செ.மீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 9 , தக்கலை (கன்னியாகுமரி) 8 செ.மீ, அரவக்குறிச்சி (கரூர்) 7 செ.மீ, பெருஞ்சாணி அணை( கன்னியாகுமரி) 6 செ.மீ, முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), ஓசூர் (கிருஷ்ணகிரி), கரூர் .பரமத்தி, குடலுர் பஜார் (நீலகிரி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), தணியமங்கலம் (மதுரை) ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக மே 15, 16, 17 ஆகிய தேதிகளில், குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு, தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது

ABOUT THE AUTHOR

...view details