இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
- வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினத்திலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- அதேபோல் நாளை (அக். 17) தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லார், திருநெல்வேலி பாபநாசம், கோவை வால்பாறை ஆகிய பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை வருகின்ற 19ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்பதால் அக்டோபர் 18ஆம் தேதி அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- அதேபோல் அக்டோபர் 19ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளிலும், அக்டோபர் 20ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல் வட தமிழ்நாடு, ஆந்திரக் கடலோரப் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.