தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் இப்படித்தான் இருக்கும்...! - Snowfall in Chennai for 48 hours

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பனி மூட்டம்
தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பனி மூட்டம்

By

Published : Jan 27, 2020, 6:37 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை காணப்படும். தமிழ்நாட்டில் காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் நிலவும்..

சென்னை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வானம் தெளிவாகக் காணப்படும். வெப்பத்தின் அளவு 21 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்.தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பில்லை என்பதால் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:’அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை’

ABOUT THE AUTHOR

...view details