சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூலை.19), நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
நாளை (ஜூலை.20) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 21 முதல் ஜூலை 23: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை, ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை, கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்)
- சின்னக்கல்லார் (கோவை) - 7
- புழல் (திருவள்ளூர்)- 5
- வால்பாறை தாலுகா ஆபீஸ் (கோவை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), எண்ணோர் (திருவள்ளூர்)- தலா 4
- நடுவட்டம் (நீலகிரி), சோழவரம் (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), சோலையார் (கோவை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) - தலா 3
- அவலாஞ்சி (நீலகிரி), தேவலா (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), வால்பாறை (கோவை), பூண்டி (திருவள்ளூர்), ஆத்தூர் (சேலம்), திருத்தணி (திருவள்ளூர்) - தலா 2
- தேக்கடி (தேனீ), திருவள்ளூர்- தலா 1
மீனவர்களுக்கான எச்சரிக்கை