தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை! - Weather Update

Today Weather Update: காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Today Weather Update
மழை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 2:27 PM IST

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் மற்றும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 48 மணி நேரம் எப்படி இருக்கும்: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழைப்பதிவு: அதிகபட்சமாக நாலுமுக்கு (திருநெல்வேலி) 11செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் 10 செ.மீ முதல், 7 செ.மீ வரை மழைப்பதிவாகி உள்ளது. கடந்த 24மணி நேரத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, ஆகிய பகுதிகளில், பெரும்பாலான இடத்தில் மழையானது பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் நாளை மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:காந்தியடிகள், காமராஜர் உருவப்படத்திற்கு ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை..!

ABOUT THE AUTHOR

...view details