தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..! - காற்றழுத்த தாழ்வு

TN Rain Update: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Centre announced light rain is likely for the next two days in Tamil Nadu
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 3:10 PM IST

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஜனவரி 1ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 2ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை: வடகிழக்கு பருவமழையானது, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழை அளவு 458 மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 441.7மி.மீ ஆகும் இது இயல்பை விட 4 சதவீதம் அதிகம் ஆகும்.

குளிர்கால பருவமழை: 2024 தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜனவரி 1ஆம் தேதி பெய்த மழை அளவு 0.1 மி.மீ ஆகும். இயல்பு மழை 1.1மி.மீ ஆகும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில், லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைபெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்து, நாலுமுக்கு பகுதியில் தலா 3 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது. காக்காச்சி, மாஞ்சோலை பகுதியில் தலா 2 செ.மீ மழையும், தென்காசி, ராமநதி அணைப்பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகளில், இன்று முதல் 5ம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரிந்து கொலை செய்த வழக்கில் இருவர் கைது.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details