தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 2, 2023, 1:22 PM IST

ETV Bharat / state

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Center said that heavy rain is likely in 15 districts of Tamil Nadu
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 2) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஏப்ரல் 3) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 4, 5ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 6ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் வேடசந்தூர் (திண்டுக்கல்), பாலக்கோடு (தருமபுரி), புகையிலை ஆராய்ச்சி மையம், வேடசந்தூர் (திண்டுக்கல்) பகுதிகளில் தலா 12 செ.மீ, காமாட்சிபுரம் (திண்டுக்கல்) பகுதியில் 10 செ.மீ, பாப்பாரப்பட்டி Agro (தருமபுரி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) தலா 9 செ.மீ, மாயனூர் (கரூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 6செ.மீ, பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) 5 செ.மீ, நட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: US Storm : அமெரிக்காவை புரட்டிப் போட்ட சூறாவளிக் காற்று - 26 பேர் பலி! மின்சாரமின்றி லட்சம் பேர் தவிப்பு!

இதையும் படிங்க: கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை பவனி!

ABOUT THE AUTHOR

...view details