தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடகிழக்குப் பருவக்காற்று காரணமாக மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வடகிழக்குப் பருவக்காற்று காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

By

Published : Dec 9, 2020, 1:31 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வடகிழக்குப் பருவக் காற்று காரணமாக, அடுத்த 24மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 (டிசம்பர் 10) மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்ச மழையாக (சென்டிமீட்டரில்) காயல்பட்டினம் (தூத்துக்குடி) 7, பெரியனைக்கென்பாளையம் (கோவை), கோத்தகிரி (நீலகிரி), வட்டணம் (ராமநாதபுரம்), குன்னூர் தலா 5, திருச்செந்தூர், சோலையார் (கோவை), காரியாபட்டி (விருதுநகர்), சோழிங்கநல்லூர் (சென்னை) தலா 4, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), உதகமண்டலம், தேக்கடி (தேனி), சூளகிரி (கிருஷ்ணகிரி), ஆத்தூர் (சேலம்), ஹிந்துஸ்தான் பல்கலை (செங்கல்பட்டு), வாலாஜா (ராணிப்பேட்டை), காஞ்சிபுரம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) தலா 3 செ.மீ மழை பெய்யக்கூடும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details