தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Heavy Rain Alert: வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று (டிச.19) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai meteorological center said heavy rain in south tamil nadu for the next two days
சென்னை வானிலை ஆய்வு மையம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 2:19 PM IST

சென்னை:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது இன்று (டிச.19) லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதனால், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை (டிச.20) மற்றும் நாளை மறுநாள் (டிச.21) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், டிசம்பர் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வடகிழக்கு பருவமழை: வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் தீவிரமாக உள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் அளவு 466.5மி.மீ ஆகும். இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 422 மி.மீ, இது இயல்பை விட 11% சதவீதம் அதிகம் ஆகும்.

24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:திருச்செந்தூரில் 23 செ.மீ. மழையும், காயல்பட்டினத்தில் 21 செ.மீ., நாலுமுக்கு 19 செ.மீ. , காக்காச்சி 18 செ.மீ, மாஞ்சோலை 17 செ.மீ, ஊத்து 15 செ.மீ, மூலைக்கரைப்பட்டி 13 செ.மீ, அம்பாசமுத்திரம் 12 செ.மீ, பாபநாசம் 11 செ.மீ, கன்னடயன் அணைக்கட்டு 9 செ.மீ, மணிமுத்தாறு 8 செ.மீ, சேர்வலாறு அணை, களக்காடு தலா 6 செ.மீ, சேரன்மகாதேவி 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:நாளை (டிச. 20) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்.. தரைக்கற்கள் முற்றிலும் சேதம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details